இந்தச் செய்தி உறுதி செய்யப்பட்ட உண்மை செய்தி. லண்டனில் இருந்து வரும் தி கார்டியன் நாளிதழில் வந்த ஆங்கிலச் செய்தியைக் கூகுள் ஜெமினியின் உதவியோடு தமிழ்ப்படுத்தியுள்ளேன். படத்தில் இருக்கும் தமிழ் பிழைகளுக்குக் காரணம் ஜெமினி ஏ.ஐ., நான் இல்லை.

ஆனானப்பட்ட பாரிஸ் லூவர் (Louvre) அருங்காட்சியகத்திலேயே தண்ணீர் ஒழுகுகிறதாம். நூறு ஆண்டுகள் பழமையான பல கலைப்பொருள்கள் சேதமாகி இருக்கின்றன என இந்தச் செய்திச் சொல்கிறது. படிக்கவே வருத்தமாக இருக்கிறது.

இதை நினைக்கையில், சில வாரங்களுக்கு முன் என் வீட்டு மொட்டைமாடியில் தண்ணீர் தேங்கி, என் அறைக்குள் பெரிதாக ஒழுகுவதற்கு முன்னரே, நான் செலவு செய்து அதைச் சரிசெய்தது நல்லது என்றே தோன்றுகிறது.

எது எப்படியோ, என் செல்பேசியோ மடிக்கணினியோ நனைந்தால் அரிசிப் பையில் சில நாட்கள் போட்டுவைக்கலாம்; அல்லது பழுதுநீக்கம் செய்துவிடலாம். ஆனால், மோனா லிசாவை அரிசிப் பையில் திணித்து வைக்க முடியாதல்லவா? அதனால், ஒரு நல்ல கொத்தனாரை வேலைக்கு அமர்த்தும்படி அருங்காட்சியக அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு: இது வேடிக்கையான பதிவு. நம்மூரை விட ஐரோப்பாவில் இருக்கும் அருங்காட்சியகங்கள் எல்லா வகையிலும் சிறந்தவை எனப் புள்ளிவிவரங்களோடு வந்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நன்றி.

Generated from the English news to Tamil by Google Gemini
Generated from the English news to Tamil by Google Gemini

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading