ஒலி மட்டுமில்லை. இன்றிலிருந்து கூகுள் நோட்புக்-எல்-எம்மில் (Google NotebookLM) “ஒலியும் ஒளியும்” கிடைக்கிறது.
எனது “நுட்பம்” நூல் எதைப் பற்றியது? அதில் என்ன எழுதியிருக்கிறேன்? தமிழில் எழுதியுள்ளீர்கள், நூலின் சுருக்கத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா? படிக்க நேரமில்லை, காணொலியாக சொல்ல முடியுமா?
இதற்கெல்லாம் எளிதாக விடையளிக்க வந்திருக்கிறது, கூகுள் நோட்புக்-எல்-எம்மின் புது வசதி. இதன் பெயர் “காணொலி சுருக்கம்” (Video Overview). இதற்கு முன்பிருந்த “ஒலி சுருக்கம்” (Audio Overview aka Podcast) போன்றது. இதில் நாம் கொடுக்கும் தகவல்களைப் படித்து, சுருக்கமான ஒரு மேலோட்டத்தை ஒலி-ஒளியாக உருவாக்கிக் கொடுக்கிறது.
சுமார் 260 பக்க நூல் ‘நுட்பம்’. ஐந்தே நிமிடங்களில் நூலிலிருந்து முக்கியமான ஐந்து அத்தியாயங்களை அதுவாகவே தேர்ந்தெடுத்து ஏழு நிமிட காணொலியாக, அதற்கு ஏற்ற குரல் பதிவோடு கொடுக்கிறது. பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.
எனது நூல்களை அமேசானில் வாங்க இங்கே போகவும்.
(இந்த காணொலியை உருவாக்க நான் செய்தது: நுட்பம் நூலின் மூலப்பிரதியை NotebookLM தளத்தில் கொடுத்து, Video Overview வசதியை இயக்கியது. அதற்கு அடுத்து அது கொடுத்த வீடியோவை திறந்து நூலின் அட்டைப் படத்தைச் சேர்த்தது, அவ்வளவே).
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


Awesome, good summary on the key area. multilingual is supported?
Thanks. Yes, in the sense, it accepts material from any language (my book was in Tamil), but the output audio/video is in English only for now. Audio Overview can be heard in most languages.
//Video Overviews are only available in English for now, more languages coming soon.//