இந்தச் செய்தியைப் படித்தால் எனக்கு விநோதமாக இருக்கிறது – “விஸ்வாசம்” படம் இரண்டரை மணி நேரம் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி, மேலும் “பேட்டை” படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் என்கிறது.

ஒரு நல்ல திரைப்படம் இரண்டு மணி, சில நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பது என் கருத்து. இரண்டரை மணிக்கு மேல் ஓடும் படங்களை எடுப்பது தமிழ் (மற்றும் இந்திய மொழி) படங்களுக்கே உரிய ஒரு வியாதி என்று நினைக்கிறேன். மற்ற (உலக) மொழிகளிலும் பெரிய படங்கள் அவ்வப்போது வருகிறது, ஆனால் இந்தளவிற்கு இல்லை.

விநியோகஸ்தர்கள் பட விநியோக உரிமையை வாங்கும் விலை, படம் ஓடும் நேரத்தை பொருத்தா இருக்கிறது? இயக்குனர்களே, உங்கள் ரசிகர்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

இரண்டு மணிக்கு மேல் ஓடினால் அதற்குப் பெயர் திரைப்படம் இல்லை, தொடர்ந்து ஒரே நாளில் ஓடும் மெகா சீரியல்!

Categorized in:

Tagged in: