ரொம்ப நாட்கள் சார்ச்சையில் மாட்டிக் கொண்டிருந்த படம் “கத்தி”. இப்போ தான் எல்லா தமிழ் படங்களும் ஏதாவது ஒரு சார்சையில் மாட்டிக் கொள்கிறதே, நாட்டில் உள்ள அனைவரின் சம்மதத்தில் தான் இனி தமிழ் படம் எடுக்க வேண்டும் போல, அதற்கு பதில் ஒவ்வொரு படத்திற்கும் ஓட்டெடுப்பே நடத்திவிடலாம். சினிமா ஒரு கமர்ஷியல் விஷயம், அதை எடுப்பவர்கள், நடிப்பவர்கள் எல்லோரும் இதை தொழிலாகத் தான் செய்கிறார்கள், சுதந்திர போர் காலம் போல சமூக/நாட்டு நலனிற்காக இல்லை என்பதை எப்போது தான் நம் அரசியல்/சமூக ஆர்வலர்கள் புரிந்துக் கொள்வார்களோ தெரியவில்லை?, அப்படி எதிர்ப்பார்ப்பவர்கள் அரசு செய்திப்படங்களை மட்டும் தான் பார்க்க வேண்டும்.  சினிமாவை தொழிலாக செய்வதில் என்ன தவறு உள்ளது என எனக்கு புரியவில்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் (Vijay) நடித்த “கத்தி” படத்தை இன்று குடும்பத்தொடுப் பார்த்தேன். படம் எனக்கு சுமாராக இருந்தது, என் பதினொரு வயசு மகனுக்கு மிகவும் பிடித்திருந்தது. விஜய்யின் முந்தைய படமான “அழகிய தமிழ் மகன்”, எம்.ஜி.ஆரின் “எங்க வீட்டுப் பிள்ளை” போல இரண்டு வேஷங்கள் நாயகனுக்கு. இதில் ஒருவன் மிக நல்லவன், இன்னொருவன் திருடன் ஆனால் நல்லவன் (தமிழ் சினிமா ஹீரோ தவரே செய்தாலும் நல்லவன் தான்). இந்த ஆள் மாறாட்டத்தில் என்ன நடப்பது என்பது தான் கதையின் பின்புரம். நடிவில் பன்னாட்டு நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவது/இயற்கை வளங்களை அழிப்பது என போய், நாயகன் எல்லாவற்றையும் போராடி வேல்வது மீதி கதை. இன்னும் எத்தனை காலம் தான் இப்படி கம்யூனிஸம் பேசுவார்களோ தெரியவில்லை. எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை, புதுசா ஏதாவது கதைச் சொல்லுங்க என்று தான் சொல்லுகிறேன்.

நாயகி சமந்தா, அவ்வப்போது வந்து போகிறார், கணினியை தட்டுகிறார் அவ்வளவு தான். “நான் ஈ” படத்தில் நான் பார்த்த இந்த அழகிய பெண்ணிற்கு (Samantha) இந்தப் படத்தில் ஒன்றும் பெரிசாக வேலையில்லை. கதை முழுக்க முழுக்க நாயகன் விஜயை சார்ந்தது, அதனால் தான் ஒரு வேடம் போராமல் அவருக்கு இரண்டு வேடம்!. அனிருத் இசையில் பாடல்கள், எனக்கு நினைவில் நின்றது “செல்பிபுள்ள” பாடல் மட்டும் தான்.

முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களாக வரும் கிழவர்கள் நன்றாக செய்துள்ளார்கள். நம் வீட்டு முதியவர்களிடம் ஆபாரமான திறமையும், அனுபவமும் உள்ளது என்பதை அழகாகவும் ஆழமாகவும் சொல்லியுள்ள இயக்குனருக்கு பாராட்டுகள். படத்தில் வரும் பன்னாட்டு நிறுவனங்களைப் பற்றிய கருத்தைவிட எனக்கு இந்த முதியவர்களைப் பற்றி சொல்லியிருந்தது பிடித்தது. அதே போல சென்னைக்கு வரும் தண்ணீர் வரத்தை நிறுத்தும் திட்டம் நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் ரசிக்கும்படி இருந்தது.

மொத்ததில் கத்தி, மொக்கையில்லை.

கத்தி (2014)

கத்தி (2014)

 

Categorized in:

Tagged in:

,