எவ்வளவு முறை தினமணி, குமுதம் மற்றும் பலப்பல தமிழ் வலைத்தளங்களில் உள்ள பக்கங்களை Save செய்து பார்க்க முடியாமல் தவித்துள்ளீர்கள்?. இதற்கு காரணம், இன்றும் பல வலைத்தளங்கள் Unicodeற்கு வரவில்லை. They continue to use proprietory or 8-bit encoding.

இந்த பக்கங்கள், மற்றும் இவை தவிர தெரிந்த அல்லது தெரியாத எழுத்துருவாகவிருந்தாலும் அதனை Unicodeற்கு மாற்றிப் படிக்க வசதி செய்யகூடிய, இரண்டு வழிகளை இங்கு பார்போம்.

ஒன்று, முத்து நெடுமாறன் அவர்களின் அற்புதமான முரசு அஞ்சல் மென்பொருள். இதை Download செய்து, Install செய்து உபயோகிக்க வேண்டும். இதில் உள்ள பலப்பல பயன்பாட்டை, மற்றொரு நாள் பார்ப்போம்.

இன்னொரு முறை உங்கள் browserயை மட்டும் பயன்படுத்தி செய்வது. இதற்கு சுரதா யாழ்வாணன் அவர்களின் Pongku Tamil Reader & Converter  வலைத்தளதில் உள்ள மேல் தட்டில் படிக்க முடியாதவற்றை உள்ளிட்டு கீழே உள்ள ஏதாவதொரு Encoding methodஐ சுட்டுவதன் மூலம் Unicodeற்கு மாற்றிப் படிக்க முடியும்.

Categorized in:

Tagged in: