ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடைக்குப் போய்விட்டு காபி குடிக்காத வெகு சில ஆட்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன்.

ஞாயிறு மாலை நண்பரைப் பார்க்கச் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அமெரிக்க ஸ்டார்பக்ஸ் காபி கடைக்குப் போனேன். கிளம்பும் முன்னர்தான் வீட்டில் நல்ல பில்டர் காபி குடித்திருந்தேன். அதனால் சம்பிரதாயத்திற்காக காபி, டீயைத் தாண்டி என்ன இருக்கிறது என்று தேடி இதைக் குடித்தேன்.

Strawberry Acai - Starbucks, Alwarpet, Chennai
Strawberry Acai – Starbucks, Alwarpet, Chennai

இதன் பெயர் ஸ்டாபெரி அகை (Strawberry Acai). விலை ரூபாய் 335. கலர்ச் சர்க்கரைத் தண்ணீர், அவ்வளவுதான். பள்ளிக்கூடங்களுக்கு அருகே தள்ளுவண்டியில் கொடுப்பதைத் தூய்மையாகச் செய்து கொடுத்தார்கள். இரண்டு மணி நேரச் சந்திப்பில் பத்து நிமிடத்திற்கு ஒரு வாய் எனக் குடித்து முடித்தேன்.

இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர், முதல் முறையாக அமெரிக்கச் சியாட்டல் (Seattle) நகருக்குச் சென்றவுடன் முதலாவதாக நான் செய்தது ஸ்டார்பக்ஸ் காபியைத் தேடி வாங்கித் பருகியது. ஒவ்வொரு முறைப் போகும்போதும் என் அம்மாவிற்காக அங்கிருந்து எத்தியோப்பியா, அரேபியா, கொலம்பியா எனப் பல வகைக் காபித் தூள்களைத் தேடித் தேடி ஆர்வமாக வாங்கி வருவேன்.

இப்போது இந்தியாவிலேயே எல்லாம் கிடைக்கிறது, விலையும் குறைவு; ஆனால் வாங்கும் அந்த ஆர்வம் என்னிடம் இல்லை. அதனால் ஸ்டார்பக்ஸ் கடைக்குப் போய்க் காபியும் குடிக்காமல் வந்தது ஏனோ விசித்திரமாகத் தெரியவில்லை.

பழைய நினைவுகள்: சியாட்டில், அமெரிக்கா. 2003-ல் பசிபிக் பிளேஸ் ஸ்டார்பக்ஸ் அருகே.
பழைய நினைவுகள்: சியாட்டில், அமெரிக்கா. 2003-ல் பசிபிக் பிளேஸ் ஸ்டார்பக்ஸ் அருகே.

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading