நான் தீவிர பக்தனோ, அடிக்கடி கோயில் போகிறவனோ இல்லை. பெற்றோகளுக்காகவோ, உறவினர்கள் வற்புறுத்தினால் போவேன். மனம் குழப்பத்தில் இருந்தாலோ, இல்லையென்றால் ரொம்ப அமைதியாக இருந்தாலோ தான், நானாகவே எனக்கு பிடித்த கோயிலுக்கு செல்வேன் – அது கூட்டமே இல்லாத, அல்லது கூட்டம் குறைவாக இருக்கும் கோயில்களாக தான் இருக்கும். அப்படி எனக்கு பிடித்த ஒரு கோயில், சென்னை தி.நகர் ராஜா தெருவில் உள்ள அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில். இது சுமார் 75 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில், தமிழ் நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ளது, அதிசயமாக நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.

Agasthiyar Koil, Raja Street, T.Nagar, Chennai
இங்கே ஹரியும் உண்டு, சிவனும் உண்டு. அகஸ்தியர் கோவிலில் பல சன்னதிகள் இருக்கிறது:
- சித்தி புத்தி பிள்ளையார்
- நவக்ரஹ சந்நிதி
- ஶ்ரீ சுந்தர வணிபேஸ்வர் மற்றும் ஶ்ரீ சுந்தர வடிவாம்பிகை
- ஶ்ரீ சிவ சுப்ரமண்யர் மற்றும் வள்ளி, தேவசேனா
- ஶ்ரீ அகஸ்தியர் மற்றும் லோபா முத்திரை
- ஶ்ரீ ஐயப்பன்
- ஶ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் பெருமாள்
- ஶ்ரீ ஹனுமான்
மற்றும் பல சிரிய சன்னிதிகள்.
இந்த கோயில் பற்றி பலப் படங்களுடன் கூடிய பதிவை ஆங்கிலத்தில் இந்தப் தளத்தில் பார்த்தேன்.