கார்த்தி (Karthi) மற்றும் தமன்னா (Tamannaah) நடித்த இந்தப் படத்தை (பையா) இன்று பார்த்தேன். பீமாவைப் போலவே எதிர்ப்பார்ப்புகளை கிளப்பி, ஆனால் ஏமாற்றம் அடைய வைத்த மற்றும் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. படம் முழுக்க காரில் சென்றுக் கொண்டே இருக்கிறார்கள், இல்லை ஒரு இருபது பேரை அடிக்கிறார் நாயகன். ஒருவிதமான முகப் பாவனையும் இல்லாமல் பாடல்களில் மட்டும் ஆடிப் போகிறார் நாயகி. நாயகனின் நண்பர்கள் எதற்கும் கேள்வியே கேட்க மாட்டார்கள் போல, எப்போதும் வேலையே இல்லாத நாயகனோடு செல்பேசியில் பேசுவதும், உதவி செய்வதும் தான் அவர்களின் வேலைப் போல.

கார்த்தியிடம் இன்னும் பருத்திவீரன் சாயல் (பேச்சிலும், முகப்பாவனைகளிலும்) போகவில்லை, அதை அவர் முற்றிலும் மறத்தல், படம் பார்க்கும் நமக்கு நல்லது!

பையா  (2010)

பையா (2010)

Categorized in:

Tagged in:

, ,