-
Selfie with Mr T M Krishna
I was happy to have taken a picture with the famous Carnatic singer & author Mr T.M. Krishna. It happened this weekend at a lunch event, when I recollected the time, we were both in the same (adult) swimming class at a pool in Chennai many years ago. Best wishes for him to keep giving us wonderful art forever.
-
Curtain raiser to Navarathri Golu 2021
இரண்டு ஆண்டுகளாக நீண்ட நித்திரையிலிருந்து எங்கள் வீட்டில் இருக்கும் பொம்மைகள் இந்த வருட நவராத்திரி விழாவிற்காக வெளியில் வந்திருக்கிறன. வீட்டுப் பரணிலிருந்து, எல்லா அட்டைப் பெட்டிகளையும் கீழிறக்கி, பிரித்து, ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து, வகைப்படுத்தி வைக்கும் வேலை இன்றிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. இதற்குப் பிறகு கொலுப் படிக் கட்டி, அதற்குமேல் துணி போட்டு, அலங்காரம் செய்து பொம்மைகளை அடுக்க வேண்டும். எல்லாவற்றையும் செய்ய ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் ஆகும் என்பது என் அம்மா மற்றும் மனைவியின் அனுபவக் கணிப்பு. என் வேலை வேடிக்கைப் பார்ப்பது! கொரோனா சூழ்நிலையில், பண்டிகையை இணையவழியில் தான் கொண்டாட வேண்டும் போலிருக்கிறது. போன வருடம் மிகச் சிறிய அளவிலான கொலு தான் வைத்தோம். இறைவன் அருளில் அடுத்த வருடத்திற்குள் பெருந்தொற்று உலகத்தை விட்டு முற்றிலும் போய், எல்லோரும் நலமாக வாழப் பிரார்த்திக்கிறேன்.
-
Post card of World Classical Tamil Conference 2010
இன்று, வீட்டிலிருக்கும் என் நூலகத்திலிருந்து எதையோ எடுக்கும் போது, கண்ணில்பட்டது இது. 2010இல் உலகத் தமிழ் செம்மொழி (கோவை) மாநாட்டின் சிறப்பு அஞ்சலகத்திலிருந்து என் மகனுக்கு நான் அனுப்பிய சிறப்புத் தபால் அட்டை. நிறையவே கசங்கியிருந்தது, உடனே அதைச் சமன்படுத்தி, கடைக்குப் போய் கண்ணாடி சட்டம் அடித்துவிட்டேன். இனி இது பாதுகாப்பாக என் அறையின் சுவரில் இருக்கும். அந்த மாநாட்டோடு நடந்த இணைய மாநாட்டின் குழுவில் இருந்ததில் பல அனுபவங்கள் நெஞ்சில் வந்து சென்றது. அப்போது வழங்கிய கேடயத்தைத்தோடு, இந்தத் தபால் அட்டையை நான் விலைமதிப்பற்றதாக உணர்கிறேன். Here is the blog post I wrote just after the TI2010 conference got over with links to photographs from the event.
-
Trip to Ooty in 1995
Going through my photo albums, I found old pictures of a trip I went in 1995, during my college days with classmates. It was a 4-day trip to Ooty and Bangalore, we went by train from Chennai to Mettupalayam and from there we took the famous Nilgiri Mountain Railway, which in 2005 was awarded as a UNESCO World Heritage Site. On return, we went to Coonor, then went by a private bus to Bangalore from where we caught another train to Chennai. Going through the 1995 photos, I recollected my trips to Ooty after the 1995 trip. In the last decade, I have been twice to Ooty Hills, once in…
-
Navarathri Golu 2020
எங்கள் வீட்டில் வருடா வருடம் (2019, 2018), விமர்சையாக, இரண்டு அல்லது மூன்று கொலு அடுக்குகளில், பல படிகளாகக் கொலு வைப்போம். கொரோனா சூழ்நிலையால், என் அம்மாவும் அனுமதித்த காரணத்தால், இந்த ஆண்டு எளிதாக வைத்திருக்கிறோம். ஒரு வட்ட சாப்பிடும் மேசையில், மூன்று மரப் படிகளை வைத்து மிகச் சிறிய அளவிலான கொலு. நண்பர்களை, உற்றார், சுற்றத்தார்களை அழைக்கவில்லை. மன்னிக்கவும்! எங்கள் சகோதரிகளையும், என் பெற்றோர்களின் உடன் பிறந்தவர்களையும் அவர்களது குடும்பத்தினர்கள் வந்தால் வரவேற்க எண்ணம். அதுவும் முகக்கவசம் கட்டாயம் எனச் சொல்லத் திட்டம். கடவுளின் அருளில் அடுத்த ஆண்டு உலக மக்கள் ஆரோக்யமாக, பயமின்றி வாழும் சூழ்நிலை திரும்பி வர வேண்டுகிறேன் – அப்போது நல்ல முறையில் கொலு வைத்து விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க எண்ணம்.