இன்று (டிசம்பர் 20, 2013) திரைக்கு வந்த படம் “என்றென்றும் புன்னகை”. ஜீவா (Jiiva), திரிஷா (Trisha), சந்தானம் (Santhanam), நாசர் (Nassar), ஆண்ட்ரியா (Andrea) ஆகியோர் நடித்துள்ளப் படத்தை இன்று இரவுக்காட்சிப் பார்த்தேன். சொல்லிக் கொள்ளும்படி  புதுமையாக எதுவும் படத்தில் இல்லை, அதே பழைய அரைத்த மாவுத்தான், ஒரு முறை பார்க்கலாம். கதாநாயகன் ஜீவாவுக்கு பெண்களை கண்டாலே ஆகாது. நண்பர்கள் ஜீவா, சந்தானம், வினய் மூவரும் கல்யாணமே செய்யப் போவதில்லை என்று இருக்கிறார்கள். இறுதியில் ஜீவா, திரிஷா காதலிப்பது தான் கதை.நடிவில் கவர்ச்சிக்காக ஆண்ட்ரியா  இருப்பாடல்களில் வந்து ஜீவாவை கவர முயற்ச்சித்து தோற்றுப்போகிறார்.

திரிஷா வயதானலும் அழகாக இருக்கிறார், தனது நேர்த்தியான நடிப்பால் படத்திற்கே அவர் தான் பலம் கூட்டுகிறார். ஜீவா இதைவிட நன்றாக செய்யக்கூடியவர்  அவரை இயக்குனர் சரியாக பயன்படுத்தி இருக்கலாம், ஆனால் மனிதர் உடம்பை இன்னும் இளமையாகவே வைத்திருக்கிறார், அதற்கு பாராட்ட வேண்டும்.

சுவிட்சர்லாந்து நாட்டின் பனிமலைக் காட்சிகள் கண்ணிற்கு குளுமையாக இருக்கிறது. படத்தில் நிறையக் காட்சிகள் பார்த்து சலித்தவை, உதாரணம் சுவிட்சர்லாந்தில் ஜீவா இயக்கும் விளம்பரப் படப்பிடிப்பில் நடுவில் ஆண்ட்ரியா விட்டுச் செல்வது, உடனே திரிஷா அந்த இடத்தில் நடிக்க ஓப்புக் கொள்வது; கடைசியில் நாசரின் உடம்பு கவலைக்கிடம் ஆவது;  ஜீவா நாசரிடம் பேசாமல் இருப்பதின் காரணம் என்று சொல்லிக் கொண்டேப் போகலாம். இதை அவரின் அடுத்தப் படங்களில் தவிர்க்க இயக்குனர் பழையப்படங்களைப் பார்ப்பதை கொஞ்சம் குறைக்கலாம்.

சந்தானம் அதிசயமாகச் சில இடங்களில் நம்மைச் சிரிக்க வைக்கிறார்; ஆனாலும் அவர் மது, பார் (Bar) காட்சிகளைத் தவிர்க்கலாம், எல்லா படத்திலும் அவை வருகிறது. அமெரிக்காவில் மிஸ்டரிஸ்பாட் (mystery spot) என்று இடமுண்டு, அங்கே சமமானத் தரையில் நாம் நடந்தாலும் கோணத்தில் நடப்பதுப் போல் இருக்கும், அதை தழுவி சந்தானம் போதையில் வந்து தடுமாறும் ஒரு காட்சி வருகிறது. ஒரிரு நிமிடங்கள் நன்றாக இருந்தாலும் இயக்குனர் அதை இழுத்து சலிப்படைய வைத்துவிட்டார்.

Categorized in:

Tagged in:

,