Delicious

போன இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் மாவட்டத்தில் என் நண்பன் வீட்டில் தங்கி இருந்தேன், அமெரிக்காவில் இருந்தாலும் எல்லா தமிழ் படங்களையும் அவன் பார்த்துவிடுகிறான். அவன் பார்த்தாக சொன்ன பட்டியலில் ஒரிரு படங்கள் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். போன வார கடைசியில் அவன் வீட்டில் “சூது கவ்வும்” அவனின் அன்பு கட்டாயத்தால் பார்த்தேன் (வீட்டில் தங்க வேண்டுமே) .

விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் (M.S.Bhaskar) நடித்திருக்கிற இப்படம் தமிழில் ஒரு வித்தியாசமான முயற்ச்சி.  கமலின் மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் பார்த்த ஆள் கடத்தல் தான் கதை என்றாலும் அதை எதார்தமாகவும் காமெடியாகவும் சொல்லியுள்ள இயக்குனரைப் பாராட்ட வேண்டும். இயக்குனர் நலன் குமரசாமி (Nalan Kumarasamy) தொலைக்காட்சி போட்டியான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் வெற்றியாளராம்.

கடத்தல் கும்பலின் தலைவனாக வரும் விஜய் சேதுபதி அடக்கமாக தனது கதாப்பாத்திரைத்தைச் செய்துள்ளார். அவருக்கு ஜோடியாக தனது கற்பனையில் மட்டுமே வரும் சஞ்சிதா ஷெட்டி (Sanchita Shetty) காட்சிகளுக்கு அழகுக் கூட்டுவதுடன் ஒரு தொடர்ப்பையும் சேர்க்கிறார். ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கார் பார்க்கிங்க் ஓட்டுநராக வரும் ரமெஷ், அங்கே வரும் விலையுயர்ந்த  Jaquar காரை ஆசையாக ஓட்டும் காட்சி அபாரம்.  அதேப் போல கடத்தல் பணத்தை எடுக்க Helicopterஐ பயன்படுத்துவதும் ரசிக்கப்படி இருந்தது.

மொத்ததில் சூது கவ்வும் ஒரு முன்று மணி நேரம் நம்மை ஆர்வத்தில் கவ்வுகிறது.

Soodhu Kavvum (சூது கவ்வும்)

Soodhu Kavvum (சூது கவ்வும்)

Categorized in:

Tagged in:

, ,