Archive

January 4, 2010

Browsing

இரா.முருகன் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் “மூன்று விரல்” புத்தகத்தைப் படித்ததில் இருந்து நான் அவரின் ரசிகராகவே ஆகிவிட்டேன். கடினமான ஒரு விஷயத்தை மிக இயல்பாக நகைச்சுவையோடு சொல்லும் அவரின் பாணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆதலால் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சிக்கு சென்றவுடன் நான் நேரே சென்றது என் நண்பர் திரு.பத்ரி ஷேசாத்ரி அவர்களின் கிழக்கு பதிப்பத்தின் கடைக்கு தான். பத்ரி கூறிப்பிட்டார் இரா.முருகன் இதுவரை கிழக்குக்கு நான்கு புத்தங்கள் எழுதியுள்ளார் என்று – உடனே என்னிடம் இல்லாத மீதம் இரண்டு புத்தங்களை வாங்கிவிட்டேன். அதில் ஒன்று தான் “லண்டன் டயரி”. வாங்கி ஒரிரு நாட்களிலேயே படித்தும் விட்டேன். இதை படித்தயுடன் எனக்கு தோன்றியது – ஆங்கிலத்தை விட என்னால் தமிழ் புத்தங்களை வேகமாகப் படிக்க முடிகிறது என்று. லண்டன் டயரியில்  லண்டனின் சரித்திரத்தை ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து  நமக்கு தெரிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரை…