-
Sri Sakthi Santhiyamman temple in Chennai Domestic Airport
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மெட்ராஸ் விமானநிலையத்தில், அதாவது சென்னை ஏர்போர்ட்டில் இருந்து பல ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறேன், சமீபத்தில் ஏர்போர்ட் வளாகத்தில் திறந்துள்ள பி. வி. ஆர். திரையரங்கில் சில படங்களையும் போய் பார்த்துவிட்டேன். இருந்தும் அங்கே வளாகத்தினுள் இருக்கும் புகழ்பெற்ற ஓர் அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததில்லை. இன்று தான் அதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ சக்தி சந்தியம்மன் ஆலயம் என்ற இந்தக் கோயிலில் அம்மன் சன்னிதியோடு திரு ஐயப்பன், திரு கணபதி, திரு சிவன், நவக்கிரகம் என்று சில துணை சன்னிதிகளும் இருக்கிறது. நல்ல முறையில், சுத்தமாக பராமரிக்கப்படுவது போலத் தோன்றுகிறது. அடுத்த முறை, வாய்ப்பு இருப்பின் அவசரப்படாமல், சீக்கிரம் புறப்பட்டு சென்று அம்மனைத் தரிசிக்கவும். இந்தியாவில் இருக்கும் வேறு எந்த விமான நிலையத்திலும் வளாகத்தினுள் கோயில் எதுவும் கிடையாது என்று சில ஆண்டுகளுக்கு முன் நாளிதழில் படித்த நினைவு. அந்த இடத்தில் விமானநிலையம் கட்டப்பட இடம் கையகப்படுத்திய போது, அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் வேண்டிக்கொண்டதால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்படும்…
-
திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம்
திருப்பதி ஏழுமலை வேங்கடேசா! எல்லோருக்கும் அருள் செய்யவும், உலகை காப்பாற்றவும். சென்ற வாரம் தரிசனம் செய்யச் சென்றேன், கோடை விடுமுறை என்பதால் பயங்கரக் கூட்டம். #திருப்பதி #திருமலை #கோயில் #கோவிந்தா
-
Arulmigu Kallalagar Temple, Azhagar Kovil
இன்று காலை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. வேலை நாள் மற்றும் வெயில் காலம் என்பதால் கூட்டமே இல்லை, நல்ல ஏகாந்தமான தரிசனம். மலைக்கு மேல் போகும் சாலையைச் சமீபத்தில் சீரமைத்திருக்கிறார்கள். கோயிலும் படுசுத்தமாக இருக்கிறது. மதுரை நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோயில், 108 வைஷ்ணவ திவ்வியதேசத்தில் ஒன்றானதும் கூட. நிச்சயம் சென்று சேவிக்க வேண்டிய திருத்தலம். திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இருக்கும் அற்புதமான கல் தூண்கள். பல்வேறு வடிவில் யாளி, அன்னப்பட்சி, எட்டு கைகளில் சங்கு, சக்கரம், மற்ற ஆயுதங்களோடு புல்லாங்குழல் ஊதும் மகாவிஷ்ணு என்று பல அழகான சிற்பங்கள். அடுத்த முறை செல்லும் போது தவறாமல் பார்க்கவும். #kallalagar #kallalagartemple #madurai #hindutemples #tamilnadutemples #sculptures
-
தவறாக மாட்டிக் கொண்டேன்!
இன்றைக்குக் காலை மைலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் அருகே ஒரு துக்க நிகழ்விற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. பொதுவாக அந்தப் பகுதிக்கு காரில் செல்லக் கூடாது, நிறுத்த இடம் கிடைக்கவே கிடைக்காது என்பது பிறந்த குழந்தை உட்படச் சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெரியும். அதுவும் இப்போது மெட்ரோ பணிகள் வேறு, கேட்கவே வேண்டாம். காலை எட்டு மணி தானே, கடைகள் திறந்திருக்காது பார்க்கிங் கிடைக்கும் என நினைத்து காரை எடுத்துக் கொண்டு சென்றது என் முதல் தவறு. அங்கே கிழக்கு மாட வீதியில், பாரதிய வித்யா பவன் வாசலில் நிறுத்திவிடலாம் என்பது என் திட்டம். ஆனால் எனக்கு முன்பே பல நூறு வாகனங்கள் எப்போதும் அங்கேயே தான் இருக்கிறது என்பது தெரியாமல் நான் போய் இடம் கிடைக்காமல் திண்டாடினேன். அதற்குள் என் அன்பு மனைவி “இதற்குத் தான் கார் வேண்டாம் என்று சொன்னேன்” என ஆரம்பிக்க, எனக்குப் பின்னால் வாகனங்கள் வந்து கொண்டேயிருக்க, அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்று நினைத்து கோயிலை காரில் ஒரு சுற்றுச் சுற்றினால்…
-
Sri Gangadeeswarar Temple, Purasaiwakkam, Chennai
சென்னை புரசைவாக்கம் பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு கங்காதரேசுவார் திருக்கோயிலுக்குச் சென்று இன்று ஞாயிறு காலை அமைதியாகத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த பகுதியில் இவ்வளவு பெரிய கோயில் இருப்பது வெளியில் இருந்து தெரியவில்லை. மூலவர் திருநாமம்: ஸ்ரீ கங்காதரேசுவார், தாயார்: ஸ்ரீ பங்கஜாம்பாள்.
-
Mysore, Sri Parakala Mutt Swamy vijayam to Chennai
அடுத்த இரண்டு வாரம் ஸ்ரீ பரகால மடம், மைசூர் ஜீயர் ஸ்வாமி சென்னை விஜயம். நேற்றைய தினம், மைலாப்பூர் பலாத்தோப்பு மண்டபத்தில், எங்கள் ஆச்சரியன் அவர்களின் தலைமையில் நடந்த ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருமஞ்சனத்தை (ஆராதனையை) கண்டு, ஸ்வாமியைச் செவிக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றது. அதோடு இருந்து, பிரசாதம் (மதிய உணவு) உண்ணும் பெரும் வாய்த்தது என் புண்ணியம். ஆராதனை செய்யப்படும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரின் சிறிய விக்கிரகம் சாக்ஷாத் ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகரிடம் திருவகீந்திரபுரம் ஒளஷதகிரியில் அவரின் தவத்தில் மகிழ்ந்து அருளியது என நம்பப்படுக்கிறது, இந்த பெருமாளே இன்றுவரை ஸ்ரீ பரகால மடத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் அளிக்கிறார். பக்தர்கள் காலை 11மணிக்கு அல்லது மாலை 7மணி அளவில் சென்று, இருந்து சேவிக்கலாம், வரும் (ஜனவரி) 22ஆம் தேதிவரை. தொடர்புக்கு: 044-4767 0493. மைலாப்பூர் பலாத்தோப்பு மண்டபம் திருமயிலை பறக்கும் இரயில் நிலையத்தின் எதிரில் இருக்கும் சந்தில் இருக்கிறது, கார் உள்ளே போவது சிரமம், இருசக்கர வண்டிகளைக் கூட மைலாப்பூர் குளத்தின் அருகே…
-
Sri Lakshmi Hayagriva Temple, Muthialpet, Puducherry
புதுச்சேரியில் முத்தையால் பேட்டையில் இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருக்கோயில் அந்த மாநில பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் மிகப் பிரசித்தம். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த ஞாயிறு அங்கே போக, தரிசனம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. பொறுமையான அர்ச்சனை செய்ய வேண்டி, சேவித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது. 1971யில் இந்த திருக்கோயில் நிறுவும் பணியில் என் தாத்தா ஸ்ரீசடாரி சேவகர், லிப்கோ ஸ்தாபகர் திரு கிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்களின் முயற்சியும் இருந்தது எனது பாக்கியம். இந்த திருக்கோயிலைப் பற்றி, 2012யில் நடந்த கும்பாபிஷேகப் படங்களுடன் இங்கே எழுதியிருக்கிறேன்.
-
Jambukeswarar Temple, Thiruvanaikaval, Tiruchirapalli
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் கோயில், திருச்சி. திருவரங்கம் அரங்கநாத ஸ்வாமி கோயிலைப் போல, இதுவும் ஓர் அழகான கோயில். விசாலமான இடம். உயர்ந்த மதில் சுவர்கள். கருணை வடிவான அகிலாண்டேஸ்வரி தாயார். தரைக்கு சில அடிகள் கீழே இருக்கும் சந்நிதியில் மூலவர் திரு ஜம்புகேஸ்வரர் – மிக சிறிய இடம் என்பதால் ஆறு/ஏழு பேர்கள் என்கிற எண்ணிக்கையில் குழு, குழுவாக உள்ளே அனுமதிக்கிறார்கள். நாங்கள் போனது ஞாயிறு மதிய வேளை, கூட்டம் இல்லை, ஒரு இருபது பேர் தான் இருந்திருப்பார்கள், அதனால் விரைவான சேவை. திருவானைக்காவல் கோயிலுக்குப் போகும் முன் அதன் பெருமைகள் தெரிந்திருக்கவில்லை. உள்ளே போனவுடன் நுணுக்கமான வேலைப்பாடுகளோடு செதுக்கிய பல தூண்கள், அற்புதமான சிற்பங்கள் கண்ணில் பட்டது, ஒரே ஒரு படம் தான் எடுத்திருக்கிறேன். வெளியில் மழை வேறு தொடங்கியிருந்தது, அதனால் விரைவில் திரும்பி விட்டோம். அடுத்த முறை நிதானமாக பார்க்க, பல படங்கள் எடுக்க உத்தேசம். என் தாய் வழி தாத்தாவின் ஊர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம். அதனால் பள்ளிக்குப் போன…