Archive

Velayutham

வேலாயுதம்

என் பையன் இப்போதெல்லாம் சினிமா பார்க்கிறான், விஜய் படங்கள் பார்க்கப் பிடிக்கிறது, பள்ளியிலும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள் போல். இந்த வாரம் அவனை தீபாவளி வெளியீடான விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு அழைத்துச் சென்றேன்.

சத்தியம், ஐ-நாக்ஸில் சீட்டு இல்லாததால் விருகம்பாக்கத்தில் புதிதாக வந்துள்ள “சந்திரா மால்ஃபேம் திரையரங்கிற்கு சென்றோம், இணையத்தில் பதிவு செய்திருந்தாலும் வரிசையில் நின்று டிக்கேட்டை மாற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டும். ஆற்காட் சாலையில் வழக்கத்திற்கும் அதிகமான நெரிசல், அதனால் பதினைந்து நிமிடம் தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. எனக்கு ஒரே எரிச்சல்,  தியேட்டரில் பார்த்தால் எனக்கு நீயுஸ் ரீலும், விளம்பரங்களும் தொடங்கி, வணக்கம் வரைப் பார்க்க வேண்டும். சந்திரா மாலில் ஒரேயிடத்தில் நான்கு கார்கள் (ஒன்றன் மேல் ஒன்றாக) நிறுத்த நவீன வசதி செய்துள்ளார்கள், அதனால் சுலபமாக காருக்கு இடம் கிடைத்தது.  ஃபேம் திரையரங்கு நன்றாகவும், வசதியாகவும் (Screen 1) பெரிதாகவும் உள்ளது, இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை தான். இந்தப் பக்கம் இருக்கும் சென்னைவாசிகள் நவீன திரையரங்கிற்காக இனி மைலாப்பூர், அண்ணா சாலை செல்ல வேண்டாம் – இப்படியே பராமரிப்பார்கலாப் பார்க்கலாம். 

சரி படத்திற்கு வருவோம்.  காவலன் எனக்கு பிடித்திருந்தது, நல்ல காமெடி, அதனால் இதுவும் அப்படியிருக்கும் எனப் பார்த்தால் இது முழுக்க முழுக்க கமர்ஷியல் விஜய் படம். சந்தானம் தன் வேலையை இயல்பாக செய்து ரசிக்க வைக்கிறார் (மனுஷன் இன்னும் கொஞ்சம் அடக்கிவாசித்தால் அவருக்கு நல்லது) – கடைசியில் ஓட்டைப் பிரித்துக் குதிக்கும் இடம் நல்ல சிரிப்பு. ஆக்‌ஷனிற்கு விஜய்யும், கிளு கிளுப்பிற்கு ஹன்சிகாவும், இரண்டு குத்துப் பாட்டும் கிடைத்துவிட்டதால் இயக்குனர் ராஜா கதைக்கு ரொம்ப யோசிக்கவில்லை போல – விஜய்யின் முந்தைய சிவகாசியையும், விக்ரமின் கந்தசாமியையும், காஷ்மீர் திவரவாதிகளையும், ஒரு ரசாயன வெடிப்பையும், மகாநதி சீட்டு கம்பெனி போண்டியையும் சேர்த்து கலக்கி நல்ல சுத்தமான மசாலாப் பொடியைத்தூவி கதையை முடித்துவிட்டார். ஜெனிலியாவிற்கு படத்தில் அவ்வளவாக வேலையென்று ஒன்றுமில்லை, அவ்வப்பொது வந்துப் போகிறார். மொலச்சு மூணு இலையவிடலப் பாடல் தனியாகக் கேட்க அருமையாகயிருந்தாலும் படத்தில் வரும் காட்சிகளுக்கு ஒட்டவேயில்லை – வீண் செய்துவிட்டார் ராஜா; ஜில்லாக்ஸ் பாட்டு ஹன்சிகாவாலும், விஜய்யின் துள்ளலாலும் நம்மை கொஞ்சம் இருக்கையிலேயே ஆடவைக்ககிறது.

விஜய் பிடிக்கும் என்றால் பார்க்கலாம். மற்றப்படி சொல்ல எதுவுமில்லை.

மன்மதன் அம்பு

ரொம்ப நாட்களுக்குப் பின் தமிழில் ரசிக்கும்படியாக ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தை கொடுத்ததற்கு இயக்குனர் கே.ஸ்.ரவிக்குமாரைப் பாராட்ட வேண்டும். படம் வந்து பல மாதங்கள் ஆனாலும் இன்று தான் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது, படத்தைப் பற்றி பலர் (கேபிள் சங்கரின் விவரமானப் பதிவு இங்கே) எழுதிவிட்டதால் என் கருத்து சுருக்கமாக கீழே.

Manmadan-Ambu (மன்மதன் அம்பு)

படத்தின் முதல் காட்சியிலிருந்து காமெடியும் ஆரம்பித்துவிடுகிறது, குறிப்பாக கடைசிக்காட்சிகளில் சிரித்து சிரித்து எனக்கும் மனைவிக்கும் வயிறு வலித்தேவிட்டது.  கமல், த்ரிஷாவை விட சங்கீதாவின் நடிப்பு தான் அபாரம் – மிக இயல்பாக தனது பாத்திரத்தை செய்துள்ளார். கப்பல் காட்சிகள் கண்ணுக்கு குளிமை, அருமையான ஒளிப்பதிவு. மொத்தத்தில் ஒரு நல்ல பொழுதுப்போக்கானப் படம் – ரொம்ப யோசிக்காமல் பார்த்து ரசிக்கலாம், சிரிக்கலாம்.

Kaavalan

“காவலன்” – விஜய் நடித்துள்ள இந்தப் படத்தை இன்று சென்னை ஐநாக்ஸில் பார்த்தேன். போக்கிரிக்கு பிறகு விஜய் படங்கள் எல்லாமே சுமார் தான், எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. மனுஷருக்கு நல்லகாலம் இந்தப் படம் அமைந்தது (படம் வெளிவறுவதில் நடந்த அரசியலை விட்டுவிடுவோம்). 

குத்துப்பாட்டுக்களோ, ராபின்ஹூட்டு கதையோ, பஞ்ச் டயலாக்குள், நம்பமுடியாத ஹீரோயிஸம் இவைத் தான் கடந்த சில விஜய் படங்களில் இருந்தவை, இவற்றையெல்லாம் கவனமாக தவிர்த்துயுள்ளார் இயக்குனர் சித்தீக், அவருக்கு அதற்கு ஒரு பாராட்டு. அழகான ஒரு காதல் கதை தான் படம். விஜய்-அசின் பாடல் காட்சிகளில் அழகாக வருகிறார்கள், நடன அசைவுகளும் வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் இருந்தது. வடிவேலின் நகைச்சுவையும் பல இடங்களில் சிரிக்கும்படி இருந்தது, Private Numberஐ பார்வதி நம்பியார் என்று அவர் படிப்பது நல்ல சிரிப்பு.  BodyGuard costume விஜய்க்கு நன்றாக பொறுந்திருந்தது, அதில் அவரின் Body Languageம் அருமை. கல்லூரிக்காட்சிகளில் வழக்கமான கெட்ட மாணவர்கள்-விஜய் மோதல்கள் இல்லை, நடன ஆசிரியரை ஒரே ஒரு அடி அடிப்பதோடு நிறுத்திக் கொண்டதற்கு படத்தின் இயக்குனருக்கு ஒரு நன்றி. க்ளைமாக்ஸ் நம்மால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தாலும்  எனக்கு பிடித்திருந்தது, தன்னை ஏமாற்றிய அசினை அவர் எப்படி ஏற்கிறார் என்று புரியவில்லை – ஆனால் மன்னிக்கலாம். மொத்தத்தில் காவலன் – நல்ல நகைச்சுவையான படம், பார்க்கலாம்.

kaavalan

VA Quarter Cutting

சிவா நடித்த “வ குவாட்டர் கட்டிங்” படம் இன்று பார்த்தேன். சிவாவின் முந்தைய “தமிழ் படம்” எனக்கு பிடித்திருந்ததால் இந்தப் படத்திலும் நிறைய காமெடி, கிண்டல்கள் எதிர்ப்பார்த்தேன். ஆனால் இந்தப் படம் மிகச் சுமார், படம் முழுக்க ஒரே ராத்திரியில் நடக்கும் கதையில் ஏகப்பட்ட குழப்பம்-படு மொக்கையாக படம் போகிறது. கதையே இல்லாமல், படப்பிடிப்பு நடக்கும் தினங்களில் காலை எழுந்தவுடன் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு காட்சியும் எடுக்கப்பட்டதுப் போல் ஒரு எண்ணம் நமக்கு தோன்றுகிறது.இரண்டாவது பாதியில் இதற்கு மேல் எப்படி சோதப்புவார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பில் நம்மை கடைசிவரைப் பார்க்க வைக்கிறது!

va-quarter-cutting-300x181

படத்தைப் பற்றி இதற்கு மேல் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை, மேலும் தெரிந்தக் கொள்ள விரும்பினால் கேபிள் சங்கர் என்பவரின் இந்த வலைப்பதிவைப் பார்க்கலாம்.

Endhiran

Didn’t want to get in the mad rush, pay any premium and watch this movie in the early days of release. So nearly after a month I booked online and went for this movie today at Inox, Chennai. Had limited expectation about this much talked about movie of the decade.

Overall, the movie is a bold attempt for Tamil (Indian) Movies & enjoyable. Rajni has performed well, he rocks on the Villain Robot scenes. Unlike in Raavanan, Aishwarya Rai looks beautiful (again) in this movie and is gorgeous in the songs.  Anyone having read (Late) Sujatha’s novels like En Iniya Endhira can clearly see his signatures everywhere in the movie. This is full and full a Writer Sujatha and Rajni movie. No where you could see Director Shankar’s touches – for which I thank him, we are saved from one more of his RobinHood themed repeat storylines.

Many of the Robot sequences in the movie are clearly inspired by Hollywood movies Terminator & Transformers (The climax where the Robot transforms into snake and other characters). The struggle of the Robot in understanding Human feelings, emotions, the Humanoid concepts all seem to be inspired by Star TrekData” character.

On a lighter note few unanswered questions: Where did the Robot all the raw materials needed to make so many hundred of his clones?. Who is paying for Scientist Rajni’s research, someone rich enough to be funding research and also a Mercedes-Benz Car. When 80% of Software Projects fail backed with a team of developers, testers, Project Managers; how is it possible for one scientist individually to write millions of lines of code in few years?

endhiran

பாஸ் (எ) பாஸ்கரன்

டிவியில் படத்தைப் பற்றிய நிறைய கிளிப்பிங்க்/பேட்டிகள் பார்த்து, படம் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இந்தப் படத்தை இன்று சத்யம் திரையரங்கில் பார்த்தேன். படத்தை பற்றி பலர் நிறைய சொல்லிவிட்டதால் சுருக்கமாக என் கருத்து.

படத்தின் ஒரே பலம் அதில் இருப்பதைவிட இயக்குனர் அதில் விட்டுவிட்டது தான் – சண்டை, ஆபாசம், குடும்பத்தை குளைக்கும் சதிகள் போன்றவை இல்லாமல் இருந்தது தான். இதைவிட சிறந்த முழுநீள நகைச்சுவைப் படங்கள் தமிழில் பல உண்டு, அதனால் எனக்கு இது எதிர்ப்பார்த்த அளவிற்கு எனக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் ரசித்ததில் ஒரு காட்சி, ஆர்யா வாழ்க்கையில் உருப்படுவார் என்று பொருத்திருந்து, வெறுத்துப் போய் நயன்தாரா சொல்வது, “வா வீட்டை விட்டு வெளியே போய் கல்யாண் செய்துக் கொண்டு, நான் உன்னையும் சேர்த்து காப்பாத்துகிறேன்” என்பது – அந்த காட்சியில் நல்ல எதார்த்தம்.

கிளைமாக்ஸ் பேத்தல், ஜீவாவை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். மொத்தத்தில், படம் கண்டிப்பாக பார்க்கலாம், பார்க்காவிட்டாலும் தவறட்டது ஒன்றுமில்லை.

Boss-Engira-Baskaran

பையா

கார்த்தி மற்றும் தமன்னா நடித்த இந்தப் படத்தை (பையா) இன்று பார்த்தேன். பீமாவைப் போலவே எதிர்ப்பார்ப்புகளை கிளப்பி ஆனால் ஏமாற்றம் அடைய வைத்த மற்றும் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. படம் முழுக்க காரில் சென்றுக் கொண்டே இருக்கிறார்கள், இல்லை ஒரு இருபது பேரை அடிக்கிறார் நாயகன். ஒருவிதமான பாவனையும் இல்லாமல் பாடல்களில் மட்டும் ஆடிப் போகிறார் நாயகி. நாயகனின் நண்பர்களின் வேலை இடங்களில் கேள்வியே கேட்க மாட்டார்கள் போல, எப்போதும் வேலையே இல்லாத நாயகனோடு செல்பேசியில் பேசுவதும், உதவி செய்வதும் தான் அவர்களின் வேலைப் போல.

கார்த்தியிடம் இன்னும் பருத்திவீரன் சாயல் (பேச்சிலும், முகப்பாவனைகளிலும்) போகவில்லை, அதை அவர் முற்றிலும் மறத்தல் படம் பார்க்கும் நமக்கு நல்லது!

Paiya

‘கொல கொலயா முந்திரிக்கா’

kola kolaya mundrikka

இந்த பதிவும் கிரேஸி மோகன் பற்றியது தான்.

சமீபத்தில் வெளிவந்த ‘கொல கொலயா முந்திரிக்கா’ படத்தை இன்று பார்த்தேன். கிரேஸி மோகன் கதை, வசனம் எழுதும் படங்களில் நிறைய கடி ஜோக்குகள் இருக்கும், நாமும் அதை ரசிப்போம், சிரிப்போம். ஆனால் இந்தப் படமே ‘கடியாக’ தான் இருந்தது. ஜெயராம், பாஸ்கர், நீலுப் போன்ற பல சிறந்த நகைச்சுவை நடிகர்கள் இருந்தும், வசனம் பல இடங்களில் கைக் கொடுத்தும் கதையில் சுத்தமாக ஒன்றுமே இல்லாததால் அனைத்தும் வீணடிக்கப்பட்டுவிட்டது.

கார்த்திக்குமார், ஷீகா நன்றாக பண்ணியுள்ளார்கள், வாழ்த்துக்கள். இதற்கு மேல் படத்தைப் பற்றிச் சொல்ல எனக்கும் ஒன்றுமே இல்லை.

முழுமையான விமர்சனம் வேண்டும் என்றால் இங்கே படிக்கலாம்.

Madrasapattinam (மதராசபட்டினம்)

The advertisements for this movie “Madrasapattinam” were brilliant – the 1947 days scenes shown in TV Ads, titbits about that period in Radio Ads and so on. It created good amount of buzz around the movie and the curiosity to watch it. Last weekend, I went for this movie in Mayajaal. I took a (big) risk by taking my 7 year old son to this movie, which I haven’t done earlier (other than Children movies/cartoons), surprisingly he enjoyed this movie especially seeing the old Madras and he was thrilled.

Director “Vijay” has told interestingly an otherwise usual love story, the old Madras theme has helped him a lot in the effort. The story as such feels greatly inspired by a combination of Titanic and Lagaan. Throughout the movie the pace, scenes, dialog are all well done. At many of the places, you can guess what is likely to happen but nowhere you feel bored.

Madrasapattinam (மதராசபட்டினம்)

The Art Director “V.Selvakumar” and Cinematographer “Nirav Shah” have done a superb work by recreating the Old Madras in front of us.  For example the olden day “Spencer Plaza”, “Tram” are all realistic recreations of the gone era. To a large extend this has helped to transport the audience to that time – you can feel the pace of the life in those days. Both Arya and Amy Jackson have done their respective roles well, Arya comes out well in the Kusti fight scene – his hardwork is clearly visible.

The Director has left his touches in places – like in the scenes of a man sleeping all the time, but suddenly getting up in the crucial fight scene; In the scene (which happens in the height of independence struggle)  where the labourers are meeting to decide their course after the British Governor orders the removal, voices are heard saying let us avoid confrontation. There are misses as well – like in the midnight of 14th August when independence was got, why will the police keep going after 2 lovers, I am sure they had bigger problems on that day especially who they are answerable to?

Overall, a fine work, don’t miss.

Raavanan (ராவணன்) in Tamil

I saw the movie “Raavanan” (ராவணன்) in Mayajaal with my family last week. Had high expectations for this “Mani Rathnam” movie, that was in the making for several years and with a star studded crew especially Aishwarya Rai Bachan & Vikram.  I went for the Tamil version as it had got better reviews than the Hindi version.

The scenery and the locations are beautiful and breath-taking. Vikram has delivered a phenomenal performance, Aishwarya Rai has done the stunt scenes well but otherwise haven’t had much a chance to show her full talents. The movie inspired from Ramayana Epic, had presented lot of scope for a director to tell his version of the story in a captivating manner. But Raavanan miserably falls short on this, the storyline seems to be running flat throughout the movie. The dialogues, normally much talked about in a Mani Rathnam movie is below average. Music by A.R.Rahman seems to be better in the soundtrack than in the songs.

raavanan-tamil

Overall, a movie you could easily avoid seeing.