Archive

Chennai Sangamam plays near my street corner

chennai sangamam busஇன்று ஞாயிற்றுக்கிழமை (விடுமுறை) என்பதால் நன்றாக மதிய உணவு அருந்திவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடலாமா வேண்டாமா என்று சோம்பேறித்தனமாக இருந்தபோது தெரு முனையிலிருந்து சத்தம் கேட்டது.   ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததில் இரண்டு பேருந்துகளில் ”சென்னை சங்கமம்” கலைஞர்கள் எங்கள் (சென்னை மேற்கு மாம்பலம்) தெரு முனையில் சென்னை சங்கமம் தெருவிழா நடத்தவிருப்பது தெரிந்தது. அலறி அடித்துக்கொண்டு கேமராக்களும் கையுமாக தெரு முனைக்கு ஓடினேன்.

மதியம் ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணிவரை அருமையான கிராமிய/பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை வீட்டின் அருகையில் இலவசமாகக் கண்டுகளித்தோம். தப்பாட்டம், புலி ஆட்டம், கத்தி வித்தை மற்றும் சில கலைகளை அழகாகவும் சுருக்கமாகவும் செய்து காட்டினார்கள். சென்னை நகரத்திலேயே பிறந்து வளர்ந்த நான் இது போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை இதற்கு முன்பு நேரில் பார்த்ததேயில்லை, சினிமாவில் பார்த்ததோடு சரி. என்னோடு என் மகனும் பார்த்து ரசித்ததைக் கண்டு நான் மகிழ்ந்தேன், என்னைப் போலவே அண்டையயலிலுள்ள மற்ற (அரைக்காற்சட்டை அணிந்த) அப்பாக்களும் தான். 

தெரு முனையில் ஓரிரு நிமிடத்தில் ஏற்பாடு செய்தாலும்,  ஏற்பாட்டின் எல்லா அம்சத்திலும் நேர்த்தி – பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நல்ல வண்ணமயமான நேர்த்தியான புதிய உடைகள், சரியான வாத்தியங்கள் மற்றும் வந்திருந்த பேருந்திலிருந்த வண்ணமயமான பேனர் என சொல்லிக் கொண்டே போகலாம். அழிந்து வரும் இந்த கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் இந்த நிகழ்ச்சிகள் நிச்சயம் நல்ல ஒரு ஊக்கம். இதற்காகவே  ”சென்னை சங்கமம்” நிறுவனர்களுக்கும் அவர்களுக்குப் பொருளதவி செய்யும் தமிழக அரசையும் மற்றும் விளம்பரதாரர்களையும் பாராட்டவேண்டியது அவசியம். இவைத் தவிர நான் கவனித்த சில நல்ல அம்சங்கள் – மக்களை அழைக்க/கவர ஒலிப்பெருக்கி பயன்படுத்தாமல் விதூடகனை வைத்து சிறுவர்களைக் கவர்ந்தது, காவலர்கள் வராமலிருந்தது, மக்கள் ஒழுங்காகச் சத்தமிடாமல் நின்றது.

இப்போதுள்ள நிலையில் நகரங்களில் இது போல ஒரு நிகழ்ச்சி நடந்தால் தான் தெருவிற்கு வருகிறோம், இல்லை என்றால் நாம் எல்லோரும் கதவையடைத்து வீட்டினுள்ளேயே இருந்துவிடுகிறோம் – அண்டையயலில் யார் இருக்கிறார்கள் என்றோ அவர்கள் முகங்களைப் பார்க்கக்கூட வாய்ப்புகளில்லை. அப்படியே பார்த்தாலும் உதவி கேட்டுவிடுவார்களோன்று பார்த்தும் பார்க்காமல் சென்றுவிடுகிறோம்.  

சென்னை சங்கமம் தெருவிழா, சென்னை மேற்கு மாம்பலம். ஒளிப்பதிவு தி.ந.ச.வெங்கட ரங்கன்.

நிகழ்ச்சியில் நான் எடுத்த ஒளிப்பதிவை மேலேயும், எடுத்த எல்லாத் தெளிவான வண்ணப் படங்களை இங்கேயும் காணலாம்.

Chocolate Krishna

Chocolate Krishna

This Music season due to market conditions at work I couldn’t spare time to attend any of the carnatic concerts, even though I had tickets for Nungambakkam Cultural Academy who have programs in the same road (Habibullah Road) as my office. On the new year’s day I took a break and went with my wife and kid to Crazy Mohan’s new drama – Chocolate Krishna. The drama was an usual Crazy Mohan entertainment, you can certainly have a good laugh before you come out. Since this one had few magic tricks performed on stage by Crazy Mohan himself my son enjoyed it thoroughly. This was the first time I risked taking him to a live performance, but since he could understand to some extend the story (however limited it was) he cooperated and remained silent throughout the play.

If you like comedy plays and get a chance to go for this one, go for it.

Feroz Khan’s All the Best

In the evening today there was a Bollywood play "All the Best" directed by distinguished director "Feroz Khan". I was hoping it will be in English as my understanding of Hindi is extremely limited, and I will certainly not be able to appreciate a Comedy Play in Hindi. The play did turn out to be in Hindi, but since the play had a mute character there was lot of hand gestures and body language so I could understand it well and was able to have split laughs as well. The appreciation should go to the four excellent actors (Iqbal Azad, Kikoo Sharda, Kranti Redkar and Vikas Kadam) who performed brilliantly on the stage.

All the Best Hindi Play

The play deals with three friends, one blind, the other deaf and third mute, who all fall for the same girl.

If this comes to your town, don’t miss it.

சுதேசி ஐயர் – Y.Gee.Mahendra’s Drama

Swadeshi Aiyar Drama


Y.Gee.Mahendra’s UAA has released a new tamil play (drama) called “சுதேசி ஐயர்” (Sudeshi Iyer). The first show happened yesterday in Bharat Kalachar and today there was shows in Rani Seethai Hall. Seeing the banner near Duraiswamy subway yesterday, I went for the third show of the play today with my family. It was advertised as “சிரிப்போ சிரிப்பு, புதுமையோ புதுமை”, but my expectation was limited due to previous experiences with plays.


Fortunately, it turned out to be true, the play was certainly hilarious and enjoyable. Worth seeing. The story was not much, a 70 year old Swadeshi type Father wants to teach his family the illness of deteriorating value system in the materialistic world now. He takes them in a time machine to 1945 and the family gets to experience the world and value system in 1945, gets to see Mahatma Gandhi and they realize their mistakes. All this is told in a very hilarious and filled with jokes. My 4-1/2 year old son and my 75 year dad both enjoyed the play, that I guess speaks for wide audience satisfied by the play.

அய்யா… அம்மா… அம்மம்மா…

Ayya Amma Ammamma - Kaathaadi Ramamurthy

தமிழில் வெளிவந்த நகைச்சுவை நாடங்களில் மிகவும் பிரபலமாக கருதப்படுவது அய்யா… அம்மா… அம்மம்மா…

என் சிறு வயதில் சென்னை தொலைக்காட்சியில் முதல் தடவையாக பார்த்ததில் இருந்து என்னை மிகவும் கவார்ந்த மற்றும் ஒலிநாடாவில் (Audio Cassette) பலப்பல முறை நான் கேட்ட நாடங்கமும் இது தான். ‘கிரேசி’ மோகன் எழுதி காத்தாடி ராமமூர்த்தி நடித்த இந்த நாடங்கம், இதற்குப்பின் தமிழில் வெளிவந்த அனைத்து நகைச்சுவைப் படைப்புகளிலும் (சினிமா, நாடகம், கதை) தனது தாக்கத்தை பதித்துள்ளது. பிற்காலத்தில் ‘கிரேசி’ மோகன் எழுதிய பல பிரபலமாக நாடங்களில் அவரையும் அறியாமல் சிலயிடங்களில் இதன் துனுக்குகளை நாம் கேட்கலாம்.

ஒலிநாடாவில் மட்டுமே வெளிவந்த இந்த படைப்பு இப்பொழுது ஓளிதட்டு (VCD) வடிவில் வந்துள்ளது. போன வாரம் Landmark கடையில் பார்த்தவுடன் இதை வாங்கியதில் (ரூ 199) எனக்கு மகிழ்ச்சி. ஒரு சிறு ஏமாற்றம் இது சென்னை தொலைக்காட்சியில் வெளிவந்த காத்தாடி ராமமூர்த்தியுடன் டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்த மூலப்பிரதி அல்ல சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது,  

இருந்தாலும் இந்த நாடங்கத்தை இதுவரைப் பார்க்காதவார்கள் உடனே இந்த ஓளிதட்டை வாங்கிப் பார்க்கலாம்.