Bookshelf என்பதற்கு அழகான தமிழ் பெயர் என்ன?. லிப்கோ மற்றும் ஆக்ஸ்போர்டு அகராதிகளைப் பார்த்ததில் அவை இதை புத்தக அலமாரி என்கிறது (கீழேயுள்ள படத்தை பார்க்கவும்), அது ஏதோ Godrej Almirahபோல் எனக்கு தோன்றுகிறது.

bookcase-tamil

இந்த கேள்வியை Facebookல் கேட்ட போது, எனது நண்பர்கள், அருமையான சில வார்த்தைகளை சொன்னார்கள், அவை: நூலடுக்கு, நூலேணி, நூல் வைப்பு மற்றும் புத்தக அடிக்கி.

நண்பர் மணி மணிவண்ணன் அளித்த பதில்: “சென்னைப் பல்கலைப் பேரகராதி பல சொற்களைத் தருகிறது. பண்டப்பேழை, பண்டந்தாங்கி என்ற சொற்கள் புரிபவை. அலமாரி இரவற்சொல். பீரோ இரவற்சொல். தட்டு, மேற்தட்டு, போன்ற சொற்கள் ஷெல்ஃப் என்ற சொல்லுக்கு இணையானவை. பரணை பழக்கமான சொல். புத்தகப் பரணை, புத்தக அடுக்கு, புத்தகந்தாங்கி என்ற சொற்கள் புரியலாம்”.

எனக்கு நூலடுக்கு சுலபமாக இருப்பதாகப்படுகிறது, புதிதாக படிப்பவர்களுக்கும் எளிதாக புரியும். அடிக்கி Verb போல எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு வேறு வார்த்தைகள் தோன்றினால் கீழேயுள்ள comments பகுதியில் எழுதவும்.

 

Categorized in:

Tagged in: