|
|

செல்வராகவன் இயக்கத்தில் படப்பிடிப்பிலேயே பல காலம் பேசப்பட்ட படம் இது – ஆயிரத்தில் ஒருவன். கார்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளார்கள். சரித்திரமும் நவீனயுகமும் சேர்ந்த கலவை என்பதால் நடிப்பது கடினம், ஆனால் அனைவரும் பாத்திரம் அறிந்து அருமையாக செய்துள்ளார்கள். கவர்ச்சியாகவும், தைரியமாகவும், அந்தக்கால இளவரசி போலவும், கத்தி சண்டை, துப்பாக்கிப் சுடுதல் என்று படம் முழுவதும் வந்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் ரீமா சென் – அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். அவருக்கு ஒரு அருமையான வாய்ப்பு இந்த படம், அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். உண்மையில் படத்தின் நாயகன் அவர் தான். கார்தி பாத்திரம் அறிந்து அடக்கி வாசித்திருக்கிறார், இயக்குனர் இன்னும் கொஞ்சம் அடக்கியிருந்தால் கதைக்கு மேலும் வலுக்கூட்டியிருக்கும்.
செல்வராகவன் மற்றும் அவரின் குழுவின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும், விவரத்திலும் நன்றாக உணர முடிகிறது. தமிழில் கடைசியாக இப்படியான ஒரு படம் (சரித்திரத்தையும் கற்பனையும் கலந்து) எப்போது வந்தது என்று எனக்கு நினைவு இல்லை. Computer Graphicsஐ நன்றாக பயன்படுத்தியுள்ளர்கள், இதற்கு மேல் சிறப்பாக செய்ய ஹாலிவுட் அளவு பணம் தேவை, அதனால் இது போதும்.
படத்தின் குறைகள் என்று பார்த்தால் ரொம்ப இழுத்துவிட்டார்கள், இரண்டு படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வு. இடைவேளைக்கும் அடுத்த பகுதிக்கும் துளிக் கூட ஒட்டாதது கதையின் பலவீனம். செல்வராகவன் தான் பார்த்த மூன்று, நான்கு ஆங்கிலப் படங்களை (Gladiator, Return of Mummies) ஒரே தமிழ் படத்தில் காட்ட முயற்சி செய்துள்ளதுப் போல தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை – என்னை பொருத்தவரை இது தான் படத்தின் மிகப் பெரிய பலவீனம். இதை தவிர்த்திருந்தால் பலக்காலம் பேசப்படும் படமாக இது அமைந்திருக்கும்.
எனக்கு படத்தின் கதை பெருமளவு புரிந்தது என்று நினைக்கிறேன், என் மனைவிக்கு சுத்தமாகப் புரியவில்லை (எங்கள் இருவருக்கும் இதனால் படம் முடிந்தவுடம் வாக்குவாதம்), தமிழ் ரசிகர்களுக்காக இதில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் வசூலை அதிகரித்திருக்கும்.
ஆயிரத்தில் ஒருவன் – பார்க்கலாம், ஆனால் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் ஏன் தன் படத்தின் தலைப்பை இதற்கு வைத்தார்கள் என்று சிறிது வருந்திருப்பார்.

தமிழ் படம் இன்று பார்த்தேன். முழுப்படமும் உங்களை கண்டிப்பாக வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். தமிழில் போதுவாக தமிழ் சினிமைவை, அதுவும் பிரபல நடிகர்களை நையாண்டி(Spoof) செய்யும் படங்கள் மிக குறைவு, அதுவும் வெற்றி பெறுவது இல்லை, ஆனால் இந்தப் படம் வெற்றி என்று தான் தோன்றுகிறது. அந்த வகையில் ஒரு நல்ல முயற்சி. மேலும் சிறப்பாக, கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம், ஆனால் நையாண்டி படம் தானே என்று விட்டுவிட்டார் போல இயக்குனர்.
நாயகன் சிவாவின் நண்பர்களாக எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறை ஆடை மூர்த்தி, மனோபாலா ஆகட்டும், பாட்டியாக பறவை முனியம்மாவாகட்டும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் நடிகர்கள் தேர்வு பிரமாதம் (நாயகியை தவிர). அதற்காகவே இயக்குனர் அமுதம் அவர்களை பாராட்டலாம். ஒரே பாட்டில் நாயகன் பணக்காரர் ஆவதாகட்டும், முடிவில் வரும் நீதிமன்றக் காட்சியாகட்டும், சினிமாப்பட்டி கிராமத்தின் அறிமுகமாகட்டும், மிதிவண்டியை சுற்றியே பத்து வயதிலிருந்து பெரியவன் ஆவதாகட்டும், வில்லன்களை எதிர்க்கும் ஒவ்வொரு காட்சியாகட்டும் எல்லாமே அருமை.
நாயகன் சிவாவுக்கும், இயக்குனர் அமுதம் அவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது, அடுத்தப் படத்தையும் வித்தியாசமாக செய்தால்!

திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் வலைப்பூவில் படித்து விட்டு இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய மற்றுமொரு புத்தகம் – “இனி இது சேரி இல்லை”. சென்னையில் சேரியாய் இருந்த ஒரு இடத்தை எப்படி சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு சிறப்பாக மாற்றியமைத்தது என்பது தான் புத்தகம். நம் ஊரில் போதுவாக எப்போதுமே எதுவும் சரியாக செய்யவில்லை, ஏமாற்று வேலை என்பதைப் பற்றியே படித்து பழகிய நமக்கு இது ஒரு வித்தியாசமான புத்தகம் – எது நல்ல முறையில் தன்னார்வத்தில் வணிக நோக்கமின்றி நடைப்பெற்றது என்பதைப் பற்றி. வணிகரிதியாக அவ்வளவு வரவேற்பில்லாத இந்த மாதிரியான ஒரு தலைப்பை, தைரியமாக ஒருவித சமுக நலன் கருதி பதிப்பித்தற்கு நண்பர் திரு.பத்ரி அவர்களுக்கு தமிழ் வாசகர்கள் சார்பில் என் நன்றி.
சுத்தம், சுகாதாரம் மட்டுமில்லாமல் அரோக்கியம், வாழ்க்கை தரம், அடிப்படைக் கல்வி, சுயத் தொழில், குடிப்போதையில் இருந்து மீட்பு, முதியோர் கல்வி, சேமிப்பு – ஏமாற்று வட்டியிலிருந்து மீட்பு என்று பல வகையில் ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையாக இதை நூலின் ஆசிரியர் திரு.பைரவன் அவர்களும் ஃபவுண்டேஷனின் திரு. நாராயணன் அவர்களும் செய்துள்ளார்கள். மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி, தொடர வேண்டிய முயற்சி.
புத்தகம் ஒரு செய்தி தொகுப்பு என்ற முறையிலேயே பெருவாரியான பகுதியில் செல்கிறது. இதனால் படிக்கும் போதுப் பல இடங்களில் பொதுவான வாசகர்களுக்கு (என்னையும் உட்பட) ஒரு தொய்வு எற்படுவது உண்மை. தன்னார்வ நிறுவனத்தில் பணிபுரிவோர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள மாணவர்களுக்கும் இந்த புத்தகம் கண்டிப்பாக படித்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்றால் மிகையல்ல.
Did You Hear About the Morgans? is a comedy film that I saw today. Hugh Grant and Sarah Jessica Parker (of Sex and the City fame) play the characters of Paul and Meryl Morgan living in New York. They are close to their divorce due to infidelity.
While coming back from a dinner which Paul takes Meryl in an attempt to patch up with her, they witness a murder. The murderer wants them to be killed to erase any witness. The NYPD protects them by sending them into a witness protection to a small Wyoming town called Ray and gives them new identities. Rest of the movie is how the small town life changes them and reunites them – usual Hollywood stuff. This was the first time I read anything about this state Wyoming in USA, so I guess it was a good choice for the movie’s theme. I felt the Movie in typical Hollywood fashion has portrayed the small town “Ray” to be in a different time period. This seems to be trivializing small towns in USA (of course, I have no first hand experience of it).
Nothing exceptional to be said about the movie, other than its a typical one. You can watch it if you are on a plane or comes on cable free, not worth to go to theatre or buy a DVD!
My Dad & Mom are Senior citizens and they are not tech-savvy. Their favourite music, comprising mostly of classical & devotional are in Cassettes which have worn out and storing cassettes take up huge space & they get dusty as well. Answer is to move digital, but they are the not portable music player (iPods) people, they want to listen to their music in a Music system in living room and they want to use something that is very easy to operate. Few years back I found just one such device – Logitech Slimbox (the predecessor to Squeezebox), bought it when I went to USA. This device pulls music from your Home PC (you need to run a small server software), so you don’t need to keep syncing. The device works with both Wired Ethernet & Wireless, I had Ethernet cable running from Work room to Living Room, so that was not an issue. The device worked fine for few months and then every other month developed a problem with the Power Adaptor – every time I replaced it another good quality 220V Power Adaptor, but it kept failing, finally the device died.
I waited for few months for their new Squeezebox Touch to get released, or even any of the older models to be available in India – both didn’t happen. Giving up waiting, I decided to buy a standard MP3 Player and connect it to our living room Music system. I wanted just one feature – to play MP3 files, preferable it to automatically sync music or play from my Home PC, the UI should be with big fonts which are easy to read and a slightly larger device which is comfortable to keep it in one place. But today’s Digital Music Player’s are all very small, have too many features (Video, Radio, Voice Recording and so on). Today, I went to CROMA Showroom and bought this device – Sony NWZ-E444 – this doesn’t have syncing over Home Network, but this was the closest I could find.
Sony NWZ E444 costed Rs.7000 + taxes, additional 2 Year Warranty from CROMA – Rs.500, a Philips USB Power Adaptor – Rs.600. I liked the convenience of you just dragging and dropping files through Windows Explorer, not necessary to use iTunes or Windows Media Player or one more music software to get your music collection into the device.

Update 25/July/2010: Today while transferring files from my PC to the device I encountered few errors for WMA files, saying some meta properties are beyond scope of the device and these files will be skipped. I wondered whether Sony will have some software to do the conversation or transfer like Apple iTunes. I found the following programs at Sony Support page for the device:
1. Content Transfer – this small program helps you to drag and drop files from Windows Explorer or iTunes, gets it transferred to the Sony Walkman. I tried this now, seems to be doing it fine and fast.
2. Media Manager – this program helps in Ripping Music, importing photos and videos from multiple other formats, it also has some RSS/Podcast features which I haven’t tried yet.
இன்று தமிழ் ஆசிரியர் திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா அவர்களைப் பார்த்தப் போது தான் அவரின் தூண்டுதலில் நாங்கள் பதினொன்றாம் வகுப்பில் எடுத்தப் பேட்டி பள்ளி இதழில் வந்தது நினைவிற்கு வந்தது. அதை தேடி எடுத்தேன்.
இப்போது தான் மத்திய அரசில் பெண்கள் இட ஒதுக்கீடு என்று பேசுகிறார்கள், ஆனால் சார்க் நாடுகள் 1991ம் ஆண்டே பெண் குழங்தைகள் ஆண்டாக அறிவித்திருந்தது. இதைப் பற்றி மக்கள் சமுதாயத்திற்காகப் பாடுபடும் நல்லோர்களின் கருத்தையறிய முற்பட்டோம். எங்கள் பள்ளி செயலாளர், முதல்வர், கவிஞர் பொன்னடியான், தாமரைத் திரு ஜெயா அருணாசலம், எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆகியப்பலரை நாங்கள் நேரில் சென்று பேட்டி எடுத்தோம். அத்தொகுப்பு அந்த ஆண்டு (1991) எங்கள் பள்ளியின் இதழில் (Voice of Vailankanni) வெளிவந்தது. இப்படி ஒரு வலுவான தலைப்பை கொடுத்து கவிஞர்களை, எழுத்தாளர்களை நாங்கள் பயப்படாமல் கேள்விகள் கேட்கவும், அதைத் தெளிவாக எழுதவும் வைத்தவர் ஆசிரியர் திரு.பெ.கி.பிரபாகரன் அவர்கள் தான். எங்களிடம் கொடுத்துவிட்டு அவரே எல்லாவற்றையும் செய்யவில்லை, பேட்டியெடுக்கும் போது எங்களை நம்பி தனியாக தான் விட்டார், நாங்கள் தான் கடைசிவரைக் கட்டுரையை எழுதி முடித்தோம் – இது எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கையில் எவ்வளவு சிறந்த வாய்ப்பு, பயிற்சி என்று விளங்குகிறது. அத்தொகுப்பை சுமார் இருபது ஆண்டுகள் கழித்து உங்களுக்காக இப்போது வருடியில்(Scanner) வருடி இங்கே தந்துள்ளேன்.

(முழுக்கட்டுரையும் சுமார் பதினைந்துப் பக்கங்கள்)
Adobe Acrobat (PDF)ஆக தரமிறக்க இங்கே சொடுக்கவும்.
ஆங்கிலம் வழியாகவே முழுவதும் நான் கல்விக் கற்றாலும், எனக்கு ஓர் அளவிற்கு தமிழின் மேல் ஆர்வம் இருக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணம் என் மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர் (முகம்) திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா அவர்கள் தான்.
தி.நகரில் உள்ள சி.பி.எஸ்.இ. (C.B.S.E) பள்ளியான வேளாங்கன்னி மேல்நிலைப் பள்ளியில் (Shrine Vailankanni Senior Secondary School T.Nagar) தான் என் முழு பள்ளிப்படிப்பையும் படித்தேன் (L.K.G. to 12th standard). அப்போது எங்களுக்கு ஐந்து ஆண்டுகள் (7,9,10,11,12th Standard) தமிழ் ஆசிரியராக இருந்தவர் திரு.பெ.கி.பிரபாகரன் அவர்கள்.
பள்ளிப் படிப்பை முடித்தப்பின்(1992) ஒரிரு ஆண்டுகள் கழித்து ஐயாவை சந்தித்தோடு சரி, மீண்டும் இன்று தான் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரின் வீட்டில் (பரிதி நிலையம், 1368, ஆறாவது செக்டர், 31ஆவது தெரு, சென்னை-600078) இன்று நானும் என் பள்ளித் தோழன் கோ.மணிகண்டனும் சேர்ந்து போய் பார்த்தோம். நலம் விசாரித்தோம், பழைய கதைகள் பேசினோம். அவருக்கு நான் எங்கள் லிப்கோ நிறுவனத்தின் பேரகராதி ஒன்றைக் கொடுத்தேன், ஐயா எங்களுக்கு அவரின் “மனத்தை விட்டகலாத கவிஞர்கள்” புத்தகத்தைப் அன்பளிப்பாகக் கொடுத்தார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

_thumb.jpg)
1990ல் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் எனது ஆட்டோகிராப் புத்தகத்தில் ஐயா எழுதிக் கொடுத்ததை இன்று கண்டுப்பிடித்து படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது நெகிழ்ச்சியான நிகழ்வு.


I read about this movie after its eight category nomination to Oscar Awards along with The Hurt Locker and Avatar, immediately bought the movie. Managed to watch it today. Inglourious Basterds is a Historic Fiction war film written and directed by Quentin Tarantino and starring Brad Pitt, Christoph Waltz and others. The story is set in the time of Nazi Hitler’s occupation of France, kind of an alternate history story.
The story starts with a scene in 1941, SS Colonel Hans Landa played by “Christoph Waltz” arrives at a dairy farm in France to interrogate the farmer their about rumors he is hiding the Jewish family. From that moment till the end of the movie SS Colonel character establishes clearly as the villain of the movie.Waltz is an Austrian Actor and no doubt he has been awarded the “Academy Award for Best Support Actor” for his brilliant performance in the movie. Though brief scenes are shown, the director doesn’t fail to make an emotional impact on the viewer on the plight of Jews under Nazi occupation.
The movie gets its curious name due to Lt. Aldo Raine (Brad Pitt) in 1944 recruiting a team of eight Jewish-American soldiers in Italy for a mission to get behind enemy lines and bring fear to all German servicemen. Though Lt.Aldo Raine exhibits comical behaviour, the team succeeds on creating fear amongst Nazis and the Germans begin calling this team as “Basterds”, hence the title for movie.
If you like Historic movies with a bit of comedy, then don’t miss this one.
|