எங்கள் கிளப்பில் (TNCA Club) இன்று போட்ட படம், பசங்க. இது முழுக்க முழுக்க சிறுவர்களை மட்டும் மையமாகக் கொண்டு, எந்த ஒரு ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். படத்தின் இயக்குநர் முதல் நடிகர்கள் வரை யாரையும் கேள்விப்பட்டது கூட கிடையாது. எனக்கு இந்த படத்தில் தெரிந்த இரண்டே இரண்டு பெயர்கள் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தயாரிப்பாளர் சசிக்குமார் மட்டுமே.

முதலில் கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாக பசங்க செய்வதுப் போல தோன்றினாலும் படத்தில் ஒரு இடத்தில் கூட அபாசமோ, வன்முறையோயில்லை; மிக இயல்பான காட்சியமைப்புகள், சிறுவர்களின் நேர்த்தியான நடிப்பு. ஆசிரியராக வரும் நடிகர் அற்புதமாக செய்துயுள்ளார். முதல் பாதி கொஞ்சம் தொய்வடைந்தாலும், இடைவேளைக்குப் பிறகு படம் வேகம்.

நாயகன், நாயகி தங்கள் முதல் சந்திப்பிலிருந்து அவர்களுக்கு உதவுவது அவர்களின் செல்பேசி – இதைப் பார்க்கும் போது செல்பேசியால் ஒரு பத்தாண்டுகளிலேயே வாழ்க்கை எவ்வளவு மாறிவிட்டது என்று தோன்றியது (நான் காலேஜில் படிக்கும் போதுக்கூட இவ்வளவு எளிதாக சக மாணவிகளோடு பேச முடியாது, நண்பர்கள் நம்மை ஓட்டிவிடுவார்கள்).

இந்தப் படத்தைப் பற்றி இந்த வலைப்பக்கங்களில் (தேடல், வெட்டிப்பயல்)  அழகாக சொல்லியுள்ளதால் நான் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

பசங்க Pasanga

Categorized in:

Tagged in:

,