ரொம்ப நாட்களாகப் பார்க்க நினைத்து, எங்கள் கிளப்பில் (TNCA Club) நேற்று போட்டதினால் பார்த்தப் படம் அபியும் நானும். ”மொழி” படத்தின் இயக்குனர் ”ராதாமோகன்” அவர்களின் படமிது என்பதால் எனக்கும் என் மனைவிக்கும் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்ப்பாப்பு. ஆங்காங்கே கொஞ்சம் ”சந்தோஷ் சுப்ரமண்யம்” படத்தையும் ”கண்ணாமூச்சி ஏனடா” படத்தையும் நினைக்க வைத்தாலும் ஒரு பாசாமான அப்பாவைப் பற்றி ஒரு நல்ல படத்தைக் கொடுத்துள்ளார் ராதாமோகன். இந்த மாதிரி ஒரு கதையம்சமுள்ள படத்தை தைரியமாக தயாரித்த பிரகாஷ்ராஜ் அவர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.


