Archive

ஸ்ரீமுஷ்ணம் – SriMushnam Temple

போன சனிக்கிழமை குடும்பத்தோடு நாங்கள் ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குச் சென்று இருந்தோம். ஸ்ரீமுஷ்ணம் என் பாட்டியின் பிறந்த ஊர். ஆனால் இதுவரை நாங்கள் பலர் அங்கே போனதில்லை. இந்த முறை உறவினர் ஒருவர் அழைப்பை ஏற்று அங்கே போயிருந்தோம், நல்ல தரிசனம் கிடைத்தது.


வைஷ்ணவத்தில், இந்த பூலோகத்தில் சுயம்வக்த (சுயம்பு, தான்தோன்றி, Natural, Not man made) க்ஷேத்ரங்கள் (புனிதத் தலங்கள்) என எட்டு க்ஷேத்ரங்கள் பெரியவர்களால் கூறப்பட்டுள்ளன.  அதில் ஸ்ரீமுஷ்ணம் (தூய தமிழில் திருமுட்டம்) விசேஷமான ஒன்று, விருத்தாசலத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது. சென்னையிலிருந்து விருத்தாசலம் 220 கிலோமீட்டர் தூரம் – NH45ல் சென்று விழுப்புரம் தாண்டிய பிறகு உளுந்தூர்பேட்டையில் இடது (Left) பக்கம் திரும்பி 20 கிலோமீட்டர் செல்லவேண்டும்.


இங்கே இருக்கும் புஷ்கரணி (குளம்) – பூமியைப் பெருமாள் (விஷ்ணுவின் அவதாரமான பூவராஹ ஸ்வாமி) தூக்கும்போது பெருமாளின் வேர்வையிலிருந்து உருவானதாக ஐதிகம் (நம்பிக்கை).  இங்குள்ள ஸ்ரீ வராஹப் பெருமாளை (மூலவர்) வேண்டினால் சொத்து சம்பந்தமான தடைகள், பிரச்னைகள் விலகும், பூமி/சொத்து இவை கிடைக்கும் என்பது ஐதிகம். அது போல குளத்தின் அருகிலிருக்கும் அரசமத்தின் அடியில் ஸேவை தரும் அஸ்வத்தநாராயணனின் (ஸ்ரீ நரசிம்ஹர் ஸ்வாமி) சந்நிதி சென்று பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதிகம்.










SRIMUSHNAM Koil Lake
(கோயில் புஷ்கரணி குளம்)

SRIMUSHNAM Kopuram
(ஸ்ரீ பூவராஹ சுவாமி கோயில் கோபுரம்)

Inside Anandha Lodge where we stayed, this is the only decent hotel we were told is in Vridhachalam
(நாங்கள் தங்கியிருந்த ஆனந்தா லாட்ஜ்)

SRIMUSHNAM 020
(ஸ்ரீ அஸ்வத்தநாராயணனின் சந்நிதி)

 


 

Kuselan – A Movie Rajni will like to forget

Kuselan - A Disappointment

குசேலன் – பசுபதி, மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துல்ல ரஜினியின் புதியப் படம். கடந்த 14ம் தேதி அபிராமி அரங்கில் பார்த்தேன் – ஏன் போனேன் என்றாகிவிட்டது. பி.வாசு போன்றோரு சிறந்த இயக்குனர் இப்படி ஒரு சுமாரான படத்தை அதுவும் மலையாலத்தில் வந்த ”கதபறயும் போல்” என்ற நல்ல கதையை இப்படி எடுத்துள்ளார் என்பது மிகுந்த ஏமாற்றம்.

படம் ஏமாற்றம் என்பதை காட்டும் விதமாக அபிராமியில் கீழ்த்தளத்தில் ஒருவர் கூடயில்லை. வெளிவந்த சில நாட்களேயான  ரஜினியின் புதிய படம் என்பதை நம்பவே முடியவேயில்லை.

  • படத்தில் ஒருவர்க்கூடக் தங்களின் கதாபத்திரங்களோடு ஒட்டவேயில்லை
  • பசுபதி படம் முழுவதும் எதையோ யோசனைச் செய்துக்கொண்டேயிருக்கிறார், அவர் பேசும் காட்சியில்கூட அப்படித்தான். ஏன் இதில் நடிக்க சம்மதிதோம் என்றோ?
  • இசை பிரகாஷ் – ஒரு பாடல்கூட நினைவிலில்லை. பேரின்ப பேச்சுக்காரன் பாடல்கூட வெயில் படத்தின்வாடை தான் அடிக்கிறது
  • ரஜினி நடித்திருக்கும் அசோக் குமார் கதாபத்திரத்திற்குக் கடைசி காட்சி தவிர வேறு ஒரு காட்சிகூடயில்லை. பாடல் காட்சிகள்கூட முந்தியப் படங்களின் தழுவல் -  புதியதாக எதுயும் யோசிக்க முடியவில்லை என்பது வேட்கம்.
  • முழுப் படமும் ரஜினியின் சுய விளம்பரம். இதைப் பார்க்க ஒரு தொலைக்காட்சியில் ரஜினியின் முழுநீள பேட்டியே போதும்.

நானும் என் சிறு வயதில் ரஜினியின் ரசிகன்தான். ஆனால், குசேலன் திகட்டுகிறது. 

A scene from Kuselen (Courtesy: www.kuselanthemagician.com)

படம் இப்படி என்றால் அபிராமி அரங்கம் இதைவிட மோசம். வெளியில் நன்றாகயிருந்தாலும் உள்ளே சென்றவுடன் ஒரு பத்து வருடத்திற்கு முன்பிருந்த  திரையரங்குகளை சந்தேகமில்லாமல் நினைவுபடுத்துகிறது – அவ்வளவு பழசு.